தமிழகத்தில், விளையாட்டு உயிரையே பறிக்கும் அவலம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாகத்துல்லா, இவரது மகன் காஜா உசேன் (10). 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிறுவன் சுடிதாரின் ஷாலை வைத்து ஜன்னளில் கட்டி விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அக்கா அம்ஷ்த் பேகம் வீட்டின் சமையல் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காஜா உசேன் ஜன்னலில் கட்டி இருந்த ஷால் சிறுவனின் கழுத்தில் இறுகி உள்ளது.
இதில் போராடிய சிறுவன் மயக்கமடைந்துள்ளான். பின் மாலை வீட்டிற்கு வந்த பெற்றோர் பார்த்து அதிர்ச்சியடைத்தனர். பின்னர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது ஏற்கனவே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சிறுவனின் விளையாட்டு, அவனது உயிரையே பறித்த சம்பவம் அந்த பகுதியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
newstm.in