பாலியல் பலாத்காரம்... புகாரளித்த பெண்ணை 30 முறை கத்தியால் குத்திய ஜாமீன் குற்றவாளி!

  ராஜேஷ்.S   | Last Modified : 05 Dec, 2019 01:32 pm
stalker-out-on-bail-in-molestation-case-stabs-teen

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை சென்றவன், ஜாமீனில் வெளியே வந்து புகார் கொடுத்த சிறுமியை கத்தியால் குத்திக்கொன்ற கொடூர சம்பவம் மத்தியபிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேசம்  மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 16 வயது இளம்பெண்ணை சிவக்குமார் (19) என்பவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சிவக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த சிவக்குமார், அந்த இளம்பெண் மீது ஆத்திரத்தில் இருந்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டு, தினமும் இளம்பெண்ணை பின்தொடர்ந்து, அவரின் நடவடிக்கையை கண்காணித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று அப்பெண் வீட்டில் இருந்து பெற்றோர் வெளியே சென்றதை தெரிந்துகொண்ட சிவக்குமார், உடனே வீட்டிற்குள் புகுந்து அப்பெண்ணை கத்தியால் சராமாரியாக 30 முறை குத்தி கொன்றுள்ளார். உடனே, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close