கடன் தருவதாக ஏமாற்றிய பேங்க் மேனஜருக்கு செம அடி...! பட்டப்பகலில் அரங்கேறிய அதிர்ச்சி!

  முத்து   | Last Modified : 05 Dec, 2019 12:39 pm
broker-manager-attacked-inside-bank-in-kovai

கோவையில் கனரா வங்கி கிளைக்குள் ஏர்கன் மற்றும் கத்தியுடன் நுழைந்த ஒருவர், கடன் பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய இடைத்தரகர் மற்றும் அவரை காப்பாற்ற வந்த மேனேஜரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.  

சுங்கம் பகுதியில் கனரா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பிற்பகல் ஒண்டிப்புதூரை சேர்ந்த வெற்றிவேலன் என்பவர், ஏர்கன் மற்றும் சிறிய அளவிலான கத்தியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளார்.

நேராக மேலாளர் அறைக்கு சென்ற வெற்றிவேலன் அங்கு அமர்ந்திருந்த நபர் ஒருவரை சரமாரியாக தாக்கத் தொடங்கினார். கையில் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் கத்தியால் வெற்றிவேலன் தாக்க, அவரை வங்கி மேலாளர சந்திரேசகர் தடுக்க முயன்றார். அப்போது சந்திரசேகருக்கும் அடி உதை விழுந்தது.

வங்கி மேலாளர் அறையில் அடி தடி நிகழ்வதை பார்த்து அங்கு வந்த ஊழியர்கள் சிலர் வெற்றிவேலனை தடுக்க முயன்றனர். ஆனால் அவர் கட்டுக்கு அடங்காமல் அவர்களையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் சந்திரசேகர் புகார் அளித்தார். தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சியை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், வெற்றிவேலனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாக்குதலுக்கான காரணங்கள் தெரியவந்தன.

வாகனத்திற்கான ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வரும் வெற்றிவேலன், ஏற்கனவே ஆந்திரா வங்கியில் கடன் பெற்று அதனை சரிவர கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இடைதரகர் குணபாலன் என்பவரிடம் மூன்று லட்சம் ரூபாய் கமிஷன் கொடுத்து, சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் கடன் பெற விண்ணபித்துள்ளார்.

சிபில் ஸ்கோர் அடிப்படையில் வங்கி மேலாளர் சந்திரசேகர், வெற்றிவேலனுக்கு கடன் தர மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை இடைத்தரகர் குணபாலன் வெற்றிவேலனுக்கு தெரிவிக்காமலும் பணத்தையும் திரும்பக் கொடுக்காமலும் கடன் வாங்கி தருவதாக கூறி நீண்ட நாட்களாக அலைக்கழித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வங்கிக்கு சென்ற வெற்றிவேலன் தனக்கு கடன் கிடைக்காது என்பதை உணர்ந்து ஆத்திரத்தில் இடைத்தரகர் குணபாலனை தாக்கியுள்ளார். அதனை தடுக்க முயன்ற வங்கி மேலாளருக்கும் அடி விழுந்துள்ளது. வெற்றிவேலன் பயன்படுத்திய ஏர்கன் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close