கீழே விழுந்த பணத்தை எடுத்துசென்ற பெண்....காட்டிகொடுத்த சிசிடிவி கேமரா....

  முத்து   | Last Modified : 05 Dec, 2019 08:34 am
the-woman-who-took-the-money-down

கோவை அடுத்த ஆலாந்துறை பகுதியில் தனியார் கணினி பயிற்சி மையம் ஊழியர் தவறவிட்ட ரூ.32,000 பணத்தை அடையாளம் தெரியாத பெண்மணி ஒருவர் எடுத்து செல்வதை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கொண்டு காருண்யா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ஆலாந்துறை அடுத்த சிறுவாணி மெயின் ரோட்டில் இயங்கி வரும் தனியார் கணினி பயிற்சி மையம் சுமார் ஐந்தாண்டு வருடங்களாக இயங்கி வருகிறது. இதில் மதன் குமார் ஜெராக்ஸ் மிஷின் ஆப்ரேட்டர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்த பின் அலுவலத்தில் இருந்த  ரூபாய் 32 ஆயிரம் வருமானத்தை முதலாளியிடம் வீட்டில் ஒப்படைக்க பைக்கில் சென்றார். அப்போது,பைக்கில் பெட்ரோல் இல்லாத நிலையில், அருகில் இருந்த பெட்ரோல் பங்குக்கு  தனது பைக்கை தள்ளிச் சென்ற போது மணிபர்சில் வைத்திருந்த 32 ஆயிரம் ரூபாய் தவறிக் கீழே விழுந்தது. இதை அறியாமல் சென்ற மதன் பெட்ரோல் பங்குக்கு சென்றபோது தான் இது தெரியவந்தது

உடனே, இதுகுறித்து  தனது முதலாளியிடம் தெரிவித்தார் மதன். இதுதொடர்பாக காருண்யா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது, அடையாளம் தெரியாத பெண்மணி அந்தப் பணத்தை எடுத்து செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காருண்யா காவல்துறையினர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ-மாணவிகளிடம் அடையாளம் தெரியாத பெண்மணியைப் பற்றி விசாரித்து  வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close