எகிறும் வெங்காய விலை... பாராளுமன்றத்திலும் சர்ச்சை!

  அனிதா   | Last Modified : 05 Dec, 2019 12:22 pm
onion-price-hike

தொடர் விலை உயர்வில் வெங்காயம்... கவலையில் மூழ்கிய மக்கள்..

வெங்காயம் உரித்து கண்ணீர் வரவழைத்த காலம் மாறி, தற்போது வெங்காயம் வாங்குவதற்கு கண்கலங்க வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களில் தான் பெரிய வெங்காயம் அதிகளவு விளைகிறது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் முக்கிய இடம் வகிக்கிறது. இந்நிலையில் பருவமழை காரணமாக பல விவசாயிகள் வெங்காய சாகுபடியை கைவிட்டனர். வெங்காயம் சாகுபடி செய்த பியிர்களும் கனமழை மூழ்கியது.

இதனால் தற்போது நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், ஒரு கிலோ வெங்காயம் ரூ30க்கு விற்பனை செய்து வந்த காலம் மாறி தற்போது, 100 ரூபாயை தாண்டியுள்ளது. சென்னை கோயம்பேட்டியில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது.  பாராளுமன்றத்திலும் இது தொடர்பாக கடும் சர்ச்சை ஏற்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகிறது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close