கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை!

  அனிதா   | Last Modified : 05 Dec, 2019 01:39 pm
actor-eswar-speech

ராஜா ராணி, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல முன்னனி சீரியல்களில் நடித்தவர் ஈஸ்வர். இவர் சீரியல் நடிகை ஜெஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில் நடிகர் ஈஸ்வரை கைது செய்த போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜெயஸ்ரீ, ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் இடையே தவறான உறவு இருப்பதாகவும், மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன்னை விவாகரத்து செய்ய, ஈஸ்வர் முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் மகாலட்சுமியை சந்தித்து தனது கணவரை விட்டுவிடும்படி காலில் விழாதக் குறையாக அழுது கெஞ்சியதாக கூறிய அவர், தனது குழந்தையிடம் குடிபோதையில் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நேற்று ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த நடிகர் ஈஸ்வர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, " தன் மீது ஜெயஸ்ரீ வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது என்றும், பணத்திற்கான இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக கூறினார். விவகரத்துக்கு இருவரும் தயாராக இருந்த போது, தன்னிடம் அவருக்கு கொடுப்பதற்கான பணம் இல்லாததால் விவகரத்துக்கான பேச்சை எடுக்கவில்லை என்றும், ஏற்கனவே அவரது முதல் கணவரிடம் விவாகரத்தின் போது 2.5 கோடி பணம் கேட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது குடும்பத்தினர் மீதும் வீண் பழி போட்டுள்ளதாக தெரிவித்த அவர், இவற்றிற்கு முக்கிய காரணம் மாகாலட்சுமியின் கணவர் அணில் தான் என்றும் அவர் தூண்டுதலின் பேரில் ஜெயஸ்ரீ இவ்வாறு நடந்து கொள்வதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close