இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்! அடித்தது ஜாக்பாட்!

  Ramesh   | Last Modified : 05 Dec, 2019 03:33 pm
pm-modi-launches-a-monthly-pension-scheme-of-3-000

தமிழகத்தில், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களைப் பற்றிய போதிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுவதில்லை. இந்தியர்கள் அனைவருமே இனி மாதந்தோறும் குறைந்த பட்சமாக ரூ.3000 ஓய்வூதியமாக பெறும் வகையில் திட்டம் ஒன்றை  மத்திய அரசு வகுத்துள்ளது. ஆனாலும், இந்த திட்டத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வும், தெளிவும் பொதுமக்களுக்கு ஏற்படாததால் தமிழகத்தில் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.
மத்திய அரசு. வருடத்திற்கு ரூ.36,000 ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 நிச்சயமாக  கிடைக்கும் வகையில்  இரு பென்சன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Pradhan Mantri Shram Yogi Maandhan (PM-SYM) மற்றும் National Pension Scheme for Traders and Self-Employed Persons (NPS-Traders) என தற்போது இந்தியா முழுவதும் அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த இரண்டு திட்டங்களும் நடைமுறையில் உள்ளன.
30 வயது முதல் ஒவ்வொரு மாதமும் ரூ.100 என்று உங்களது கணக்கில் செலுத்தி வருவதன் மூலம், உங்களுடைய 60 வது வயதிலிருந்து  ஓய்வூதியத் தொகையை மாதந்தோறும் பெற்றுக் கொள்ளலாம். 

                                             
திருமணமான தம்பதியரில், ஒருவர் எதிர்பாராத விதமாக இறக்க நேரிட்டால், அவரது கணவரோ, மனைவியோ மாதந்தோறும் 50% ஓய்வூதியத் தொகையைப் (மாதத்திற்கு ரூ.1,500) எஞ்சிய வாழ்நாள் முழுமைக்கும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த இரு திட்டங்களின் மூலம், வயதைப் பொறுத்து மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை முதலீடு செய்யலாம். அதற்குச் சமமான முதலீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்கும்.ஆதார் மற்றும் சேமிப்பு வங்கி அல்லது ஜன்தன் கணக்கு இருந்தால் போதும், ஓரிரு நிமிடங்களிலேயே இத்த்திட்டத்தின் மூலம் பயன் பெற முடியும்.மாதம் ரூ.15,000க்கும் குறைவான வருமானம் பெறும் 18 முதல் 40 வயதுள்ளவர்கள் இத்திட்டங்களில் சேரலாம். அவர்கள் EPFO, ESIC அல்லது NPS ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கக் கூடாது.கணவன் ,மனைவி என தனித்தனி கணக்கு வைத்திருந்தால், இருவரும் தனித்தனியாகவே இத்திட்டத்தில் சேர்ந்து இரு மடங்கு ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close