இந்த மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் இல்லையாம்... உச்சநீதிமன்றம் அதிரடி..

  அனிதா   | Last Modified : 05 Dec, 2019 03:54 pm
local-election-canceled

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் வார்டு வரையறையை முழுமையாக முடித்திட வேண்டும் அதுவரை உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்துவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் பிரிவு 9ன் படி செல்லாது என்பதையும் தெரிவித்திருந்தது. 

ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த புதிய மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளளப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் வார்டு வரையறை செய்ய வேண்டியது அவசியம் என்றும், தேர்தல் அறிவிப்பாணைக்கு பிறகு நீதிமன்றத்தால் தேர்தலை நிறுத்த முடியாது ஆனால், தள்ளி வைக்க முடியும் எனவும் கூறினார். 

மேலும், வார்டு வரையறை பணிகள் முடிவடையாமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது ஏன்? என நீதிபதிகள்சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். இதையடுத்து, பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பழைய ஒருங்கிணைந்த மாவட்டங்கள் ஆகிய 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்கலாமா? என்று கேட்டு, பிற்பகல் 2 மணிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். இல்லை என்றால், தேர்தல் அறிவிப்பானையை ரத்து செய்ய நேரிடும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும், மாநகராட்சி, நகராட்சி ஆகிய நகர்புற அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவது குறித்து பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து பிற்பகல் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து, புதிதாகப் பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் தவிர மீதமுள்ள இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close