பெண் மருத்துவர் எரித்துகொல்லப்பட்ட சம்பவம்: இனி இது கிடையாது...!  

  முத்து   | Last Modified : 05 Dec, 2019 05:36 pm
woman-doctor-burned-incident-petrol-and-diesel-should-not-be-sold-in-bottles-and-cans

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழக பெட்ரோல் பங்குகள் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த வியாழக்கிழமை பெண் மருத்துவர் 4 பேர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெண் மருத்துவரை எரிப்பதற்காக கொலையாளிகள் பெட்ரோல் பங்கிற்கு சென்று பாட்டிலில் பெட்ரோல் வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து, தெலங்கானா அரசு பாட்டில்கள் மற்றும் கேன்களில் பெட்ரோ, டீசல் விற்கக்கூடாது என சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்திலும் பாட்டில்கள் மற்றும் கேன்களில் பெட்ரோ, டீசல் விற்கக்கூடாது என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரவுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close