கார்த்திகை தீபத்திற்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

  முத்து   | Last Modified : 05 Dec, 2019 06:52 pm
special-buses-to-be-announced-for-karthigai-deepam

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீப திருவிழாவை முன்னிட்டு 2,615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

வரும் 10ஆம் தேதி கார்த்திகை தீபம் நடைபெறுவதை முன்னிட்டும், 11ஆம் தேதி நடைபெற உள்ள பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும்  9ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகளும், தாம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ஆரணி, ஆற்காடு பகுதியில் இருந்து ஆயிரத்து 112 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இதேபோல், திருச்சியில் இருந்து 450 சிறப்பு பேருந்துகளும், சேலம், பெங்களூரு, ஓசூர் பகுதிகளில் இருந்து 251 சிறப்பு பேருந்துகளும், கோவையில் இருந்து 122 பேருந்துகளும், மதுரையில் இருந்து 100 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close