எனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...

  அனிதா   | Last Modified : 06 Dec, 2019 09:16 am
nithiyanantha-speech

ஆன்மீகவாதியாக தன்னை பிரபல படுத்த நினைக்கும் நித்தியானந்தா மீது ஆள்கடத்தல், பாலியல் புகார் என பல குற்றச்சாட்டுக்களும், வழக்குகளும் உள்ளன. இவரை கைது செய்ய குஜராத் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் கைகளில் சிக்காத நித்தியானந்தா, அவ்வபோது இணையதளம் வாயிலாக அவரது சீஷர்களுக்கு பிரசங்கம் என்ற பேரில் சம்மந்தமே இல்லாமல் எதாவது பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ ஒன்றில்,  நான் ஒரு பொறம்போக்கு என்பதால் என்னை எதுவும் செய்ய முடியாது. மானம், அவமானத்தை பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை என கூறியிருந்தார். 

இந்நிலையில், நேற்றைய தினம் நேரலையில் பேசிய நித்தியானந்தா, அண்ணாமலையை சுற்றி வந்து எனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் அதற்காக உயில் எழுதி வைத்திவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், பெருமாள் எனக்கு கொடுக்கும் கல்வி, அறிவு, ஞானத்தை மக்களுக்கு கொடுத்துவிடுவதாகவும், பக்தர்கள் கொடுக்கும் பணத்தை இந்தியாவின் நன்மைக்கே பயன்படுத்துவதாகவும் கூறிய அவர், அன்றும், இன்றும் ஒரு கப் தயிர் சாதம் மட்டுமே சாப்பிடுவதாக பேசியுள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close