அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால்.. வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல்..

  அனிதா   | Last Modified : 06 Dec, 2019 01:32 pm
rama-temple-in-ayodhya

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு டிச.6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. இது ஆண்டு தோறும் பாபர் மசூதி இடிப்பு தினமாக முஸ்லீம் அமைப்புகளால் அனுசரிக்கப்படுகிறது. இன்று பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்படவுள்ளதையொட்டி, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிகையாக நாடு முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்றைய தினம் சென்னை நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சைதாப்பேட்டையை சேர்ந்த முகமது ஹனீப் பகாவி என்பவர் பெயரில் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இங்குள்ள கோவில்களை வெளிநாட்டு வெடிகுண்டுகள் மூலம் தகர்த்துவிட்டு மசூதிகளை கட்டுவோம் என்று எழுதியிருந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றிய ஆதம்பாக்கம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close