வண்ணப் பறவைகளால் நிரம்பும் வேடந்தாங்கல்... குவியும் சுற்றுலாப்பயணிகள்..

  அனிதா   | Last Modified : 06 Dec, 2019 01:25 pm
vedanthangal-bird-sanctuary

பறவைகளிடமுள்ள வினோதங்களில் ஒன்று இடம்பெயர்தல் என்ற வலசை போதல். அதாவது ஒவ்வொரு வருடமும் ஒரு பருவ காலத்தில் பறவைகள் இடம் பெயர்ந்து வாழும். அவ்வாறு இடம் பெயரும் பறவைகள் பறக்கும் தூரம் சில நூறு மைல்களில் இருந்து பல ஆயிரக் கணக்கான மைல்கள் வரை இருக்கும். 

பறவைகளின் சரணாலயங்களில் ஒன்றான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செங்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 400 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட இந்த சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்லும். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் வேடந்தாங்கலுக்கு வந்த வெளிநாட்டுப் பறவைகள் தண்ணீர் இல்லாமல் அருகில் உள்ள நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்தன. மாவட்டம் முழுக்கவே வறட்சி நிலவியதால் பெரும்பாலான பறவைகள் இனப்பெருக்கம் செய்யாமலேயே திரும்பிச் சென்றன.

இந்த வருடம் பருவமழை ஓரளவு பெய்யத் தொடங்கியதையடுத்து, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் 17 அடி கொள்ளளவு கொண்ட வேடந்தாங்கல் ஏரி 12 அடிக்கு மேல் நிரம்பியுள்ளது. இதனால் வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் அங்கு தங்கத் தொடங்கியுள்ளன. நத்தைக்கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பெரிய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், வக்கான், கூழைக்கடா உள்ளிட்ட பறவைகள் வேடந்தாங்கலில் தங்கத் தொடங்கிவிட்டன.

தற்போது ஏரியில் தண்ணீர் இருப்பதால் தற்போது பறவைகள் அங்கு வரத் தொடங்கியுள்ளதாகவும், சுமார் 4,000-க்கும் மேற்பட்ட பறவைகள் வந்திருப்பதாகவும் விரைவில் ஏராளமான பறவைகள் சரணாலயத்திற்கு வந்துவிடும் வாய்ப்புள்ளதாகவும், வேடந்தாங்கல் வனச்சரகர் தெரிவித்துள்ளார். தற்போது, பறவைகளை கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகளும் வரத்தொடங்கிவிட்டதாகவும், வேடந்தாங்கல் வருபவர்கள் காலை அல்லது மாலை நேரத்தில் வரும்போதுதான் அதிக அளவிலான பறவைகளைப் பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பறவைகள் சரணாலயம் அருகில் ஹோட்டல்கள், ஏ.டி.எம் மையங்கள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் முன்னெச்சரிக்கையாக வருவது நல்லது எனவும் வன சரகர் அறிவுறுத்தியுள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close