வீரப்பனை என்கவுண்டர் செய்த விஜயகுமாருக்கு மத்திய அரசில் புதிய பதவி !!

  அனிதா   | Last Modified : 06 Dec, 2019 02:04 pm
ips-vijayakumar-appointed-to-amit-shah-s-defender

தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு விவகார ஆலோசகராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தன கடத்தல் வீரப்பனை என்கவுண்டர் செய்து பிடித்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் கடந்த 2018ம் ஆண்டு காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் காஷ்மீரில் 370வது பிரிவை நீக்கியதற்கு விஜயகுமாரின் ஆலோசனை தான் பெரிதும் உதவியாக இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகர் பதவியில் இருந்து அவர் ஓய்வு பெற்ற விஜயகுமார், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பு விவகார ஆலோசகராகவும், மூத்த பாதுகாப்பு ஆலோசகராகவும் விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீர் மற்றும் மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள மாநிலங்களின் பாதுகாப்பு பிரச்சனைகளில் விஜயகுமார் ஆலோசனை அளிப்பார். அதுமட்டுமின்றி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பாக விவகாரங்களையும் விஜயகுமார் கண்காணிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close