சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...

  அனிதா   | Last Modified : 06 Dec, 2019 03:28 pm
actor-mahalakshmi-speech

கடந்த சில நாட்களாக சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகின்றன. ராஜா ராணி, கல்யானம் முதல் காதல்வரை உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்தவர் ஈஸ்வர். இவர் ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெயஸ்ரீக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்திருந்தார். இந்நிலையில், திடீரென தன் கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல்நிலையத்தில் ஜெயஸ்ரீ புகார் அளித்தார். 

புகாரின் பேரில் காவல்துறையினர் ஈஸ்வர் மற்றும் அவரது தாயாரை கைது செய்தனர். ஈஸ்வர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜெயஸ்ரீ, சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தனது கணவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னிடம் விவகாரத்து கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், குடிபோதையில் தனது மகளிடம் தப்பாக நடக்க முயன்றதாகவும் அவர் கூறியிருந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, ஜாமீனில் வெளியே வந்த ஈஸ்வர், தன் மனைவியின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது. அவர் என்னிடம் பணம் பறிப்பதற்காக இதுபோன்ற பொய்களை கூறிவருவதாகவும், என் மனைவியின் நடவடிக்கைக்கு மகாலட்சுமியின் கணவர் அனில் தான் காரணம் எனவும் கூறினார். இது சின்னத்திரை வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நடிகை மஹாலஷ்மி, தனக்கும், தனது கணவருக்கும் பிரச்சனை என்பதால் எங்களுக்குள் விவாகரத்து பிரச்சனை போய்க்கொண்டிருப்பதாகவும், ஈஸ்வர் தனக்கு ஒரு நண்பர் மட்டுமே, அவரை திருமணம் செய்துகொள்ளும் என்னமோ அல்லது எங்களுக்குள் எந்த உறவோ கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். அதோடு இல்லாமல், ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ எனது கணவருக்கு தோழியாம். 7 வருட திருமண வாழ்க்கையில் இந்த தகவல் இதுவரை எனக்கு தெரியாது. அப்படியென்றால் எனது கணவருக்கும், ஜெயஸ்ரீக்கும் என்ன உறவு? என கேள்வி எழுப்பியுள்ளார் மகாலஷ்மி. இப்படி 2 குடும்பங்களுக்கிடையேயான பிரச்சனையில் அடுத்தடுத்து வெளிவரும் குற்றச்சாட்டுக்களால் சின்னத்திரை நட்சத்திரங்கள் குழம்பி போயுள்ளனர்.  

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close