இளம்பெண் பாலியல் பலாத்காரம்! அடுத்தது தீ வைத்து எரிப்பு! உலுக்கியெடுத்த சம்பவம்!

  அனிதா   | Last Modified : 06 Dec, 2019 03:40 pm
sexual-harassment

நாடு முழுவதும் பெண்கள் காம வெறிப்பிடித்த கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.  இந்த வழக்கில் கைதான இருவர் 10 ‌நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர். வழக்கு விசாரணைக்காக அந்த பெண் தனது கிராமத்திலிருந்து, ரே‌பரேலி‌யில் உள்ள நீதிமன்றத்து‌க்கு பு‌றப்பட்டார். வழியில் அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய 5 பேர், மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு அவரை தீவைத்து கொளுத்தினர். 

இதில் படுகாயமடைந்த அந்த பெண், லக்னோவிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டெல்லியிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் , பெண்ணின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதென தெரிவித்துள்ளனர். மருத்துவர் குழு ஒன்று பெண்ணின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர். முன்னதாக வாக்குமூலம் அளித்த அந்த பெண், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர்களே, தீவைத்ததாக தெரிவித்துள்ளார். அப்பெண்ணுக்கு தீ வைத்த 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் இரண்டு பேர், 10 நாட்களுக்கு முன்பு இதே வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர்கள்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close