பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் !

  அனிதா   | Last Modified : 06 Dec, 2019 04:23 pm
fraud-of-celebrity-jewel-shop

பிரபல கே.எஃப்.ஜே. நகைக்கடை அதில் முதலீடு செய்திருந்த பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நகைக்கடையின் விளம்பரப் படத்தில் நடித்திருந்த நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் சிக்கலில் சிக்கியுள்ளார்.

சென்னை மயிலாப்பூர், அண்ணாநகர், புரசைவாக்கம் , வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கிளைகளைப் பரப்பியிருந்த கேரளா பேஷன் ஜுவல்லரி நிறுவனம் தங்க நகைக்கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி, பொதுமக்களிடமிருந்து இந்த திட்டத்தில் முதலீடுகளையும் பெற்று வந்தது. இதன் தூதுவராக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலமாக மக்களிடையே புகழ் பெற்றிருந்த நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்திருந்தார்.
இதனால் கவரப்பட்ட அப்பாவி மக்கள் 1999 ரூபாய் செலுத்தி தங்க நகை சேமிப்பு திட்டத்தில் உறுப்பினர்களாகச்  சேர்ந்தனர்.  இதனால்  நஷ்டத்தில் இயங்கிய கேரள பேஷன் ஜூவல்லரிக்கு 17 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சீட்டு முடிந்தவர்களுக்கு காசோலை வழங்கப்பட அவற்றை வங்கியில் செலுத்தியவர்களுக்கு  ஏமாற்றமாக அவர்கள் செலுத்திய காசோலைகள் வங்கிக் கணக்கில் பணமில்லாததால் பவுன்ஸ் ஆகியுள்ளது.

இதனையடுத்து மக்கள் இதுகுறித்து புகாரளிக்க பணத்தைத் திருப்பி தருவதாக சொல்லி இழுத்தடித்து வந்துள்ளார். மேலும் வங்கிகளுக்குக் கட்டவேண்டிய தொகைக்காக அவரிடம் இருந்த 55 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை வங்கிகள் முடக்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்தக் கடையில் விளம்பரத்தில் லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்ததாலேயே நாங்கள் பணம் கட்டினோம் என பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரபலங்கள் தங்கள் புகழைப் பயன்படுத்தி இதுபோல மக்களைத் தவறான வழிகளில் தள்ளிவிடுவது அதிகமாகி வருகிறது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close