திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா?

  Ramesh   | Last Modified : 06 Dec, 2019 05:04 pm
ttd-special-article

திருப்பதி என்றாலே திருமலையில் வீற்றிருக்கும் பெருமாளும், லட்டும் தான் நம் அனைவரின் நினைவிற்கும் வரும். மேலும் வைணவத்தின் மகத்துவத்தை பறைசாற்றும் ஒப்பற்ற ‌ஷேத்திரம் என்றும் அறிவோம். ஆனால் அங்கு பெருமாள் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. 
வியாழனன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து விட்டு, அவருக்கு எளிய வஸ்திரத்தை சார்த்தி, மந்திர ரூபத்தில் அவரை சங்கர நாராயணராக மாற்றி, அவருக்கு வில்வ மாலை அணிவிக்கபடுகிறது. பின்னர் அவருக்கு ஒரு தட்டில் விபூதி மேல் கற்பூரம் வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது.

                                                
பெருமாள் அன்று அந்த இடத்தை விட்டு, அலமேலுமங்காபுரத்தில் உள்ள தாயாரை பார்க்க செல்வதாக ஐதீகம். அதனால் அலமேலுமங்காபுரத்தில் வெள்ளி கிழமை அன்று பெருமாளின் தரிசனத்துக்கு, கூட்டம் அலை மோதும். மறுபடியும் வெள்ளிக்கிழமை இரவு திருப்பதியில் சுவாமியை மந்திர ரூபத்தில் ஆவாகனம் செய்து, நாராயணனாக மாற்றுகிறார்கள்.  தாயாரை பார்த்து வந்து பரவசத்தில் இருக்கும் பெருமாளிடம்,அப்போது நாம் என்ன கேட்டாலும் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை பெருமாளை தரிசிக்க திருப்பதியில் அத்தனை கூட்டம் சேர என்ன காரணம் என்று இப்போது புரிந்திருக்குமே.  இனி திருப்பதி செல்வதாக இருந்தால், சனிக்கிழமைகளில் தரிசனம் அமையும் படி திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close