சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்!

  Ramesh   | Last Modified : 06 Dec, 2019 05:26 pm
amalapaul-pic

‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.
மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் "ஆடை" திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ ஷூட்  செய்து நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களைத் தொடர்ந்து கிறங்கடித்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அமலாபால்.

                                                  

 

இந்நிலையில் அமலா பால் தற்போது தென்னை மரத்தில் இருந்து இறக்கப்பட்ட கள்ளை கூஜாவில் ஒரே கல்பாக குடிக்கும் புகைப்படத்தை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கின்றார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள், மொடா குடி போல என்று தொடர்ந்து அமலாபாலைக் கிண்டல் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமலா பால் இப்படி தொடர்ந்து பல வித புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். பலரும், இதுபோன்ற புகைப்படம் வெளியிட வேண்டாம் என்று வற்புறுத்தி வரும் நிலையில், ஏற்கனவே அமலாபால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று வதந்திகள் கிளம்பி வரும் நிலையில், இப்படி வெளிப்படையாக கள்ளு குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். பிரபல நடிகை இப்படி பொதுவெளியில் கள் அருந்தும் புகைப்படத்தை வெளியிட்டதைப் பார்த்து தமிழ் திரையுலகில் பலரும் அதிர்ச்சியடைந்து, அமலாபாலின் துணிச்சலையும் பாராட்டி வருகின்றனர். இதை எல்லாம்  காலக்கொடுமைன்னு சொல்லாம... என்ன சொல்றது?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close