விஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 09:25 am
vijaya-prabhakaran-engagement

சினிமாவில் மட்டுமின்றில் அரசியல் கட்சியிலும் பிரபலமானவர் விஜயகாந்த். கேப்டன் என தொண்டர்களால் அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சைகளும் பெற்று வந்துள்ளார். இவருக்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் சினிமாவில் நடிப்பதுடன், கட்சிக் கூட்டங்களிலும் அவ்வப்போது கலந்துகொள்வதுண்டு.

இந்த நிலையில், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஸ்டாம்ப்வெண்டர் இளங்கோவின் மகளுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. பிரபலங்கள் என்றாலே வீட்டு சுபநிகழ்ச்சிகளை மிக பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்நிகழ்ச்சி மிக எளிமையாக நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close