பெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி?..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 09:59 am
how-to-make-pepper-spray

ஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம், உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் என பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நாடுமுழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள் வெளியே செல்வதற்கு பெற்றோர்கள் பயப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு சிம்லாவில் இருந்த போது, ஐபிஎஸ் அதிகாரி சௌமியா, பெண்கள் பாதுகாப்புக்காக, பெப்பர் ஸ்ப்ரே வீட்டிலேயே தயாரித்துக்கொள்வது எப்படி என்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்து ஆலோசனை வழங்கினார். இந்நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பெப்பர் ஸ்பிரே தயாரிப்பதற்கு முதலில் சிறிதளவு மிளகாய்ப்பொடியும், அதை விட குறைவான அளவுக்கு பெப்பர் பொடியும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும். இதில் மிளகாய் பொடி முகத்தில் பட்ட பிறகு எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் மிளகுப் பொடி நுகரப்படும் அடுத்த நொடியே காரத்தை மண்டைக்கு கொண்டு சென்றுவிடும். இது சுமார் ஒருவருடத்திற்கு கெட்டு போகாமல் இருக்க அசிட்டோனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் சேர்த்து கலக்கி, வடிகட்டி சிறிய பயன்படுத்தப்பட்ட ஸ்ப்ரே பாட்டில்களிலோ, செண்ட் பாட்டில்களிலோ ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.

இதை பெண்கள் தைரியமாக எடுத்து செல்லலாம். ஏனென்றால் பெண்கள் தற்காப்புக்காக பெப்பர் ஸ்பிரேயினை பயன்படுத்த கூடாது என இதுவரை எந்த சட்டமும் இல்லை.

— RD SINGH (@RD_BANA) December 2, 2019

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close