என்கவுண்டருக்கு எதிர்ப்பு... 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவு!

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 10:16 am
opposition-to-the-encounter

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்குற்றச் செயலில் ஈடுபட்ட முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 ஆகிய 4 பேரையும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே, நேற்று அதிகாலை விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது தப்பிசெல்ல முயன்றதால் குற்றவாளிகள் மூன்று பேரையும் சுட்டுக்கொன்றதாக சைபராபாத் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், ஒரு சிலர் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமல் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது வன்முறை என கூறி வருகின்றனர். இந்நிலையில் என்கவுண்டர் குறித்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்கலையும் வரும் 9 ஆம் தேதி மாலை 6 மணி வரை பதப்படுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்து நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை வரும் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close