முகவரி கேட்ட பெண்ணை கொன்று.. மூளையை எடுத்து சாப்பிட்ட கொடூரம்..

  அனிதா   | Last Modified : 08 Dec, 2019 11:00 am
woman-killed-in-philippines

பிலிப்பைன்ஸில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், முகவரி கேட்ட பெண்ணை கொன்று மூளையை எடுத்து சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம் அங்கேறியுள்ளது. 

பிலிப்பைன்ஸ் நாட்டில் சமீபத்தில் இறந்தநிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தலை பகுதி இல்லாமல் வெறும் உடல் மட்டுமே இருந்ததால் அந்த பெண் யார் என்பதை போலீசார் உறுதிபடுத்த முடியவில்லை. இது குறித்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக ஒருவர் சுற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் பெயர் பேக்டாங்க். இந்நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் விஷயங்களை கூறியுள்ளார். 

அந்த பெண் கொலை செய்யப்பட்ட அன்று, பேக்டாங்க் குடிபோதையில் பசியோடு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அந்த பெண் அவரிடம், ஆங்கிலத்தில் முகவரி கேட்டுள்ளார். இதில் எரிச்சலடைந்த பேக்டாங்க் அவரை தனியாக அழைத்து சென்று கொலை செய்துள்ளார். கொலை செய்தது ஒப்புக்கொண்ட அவரிடம் தலை எங்கே? என கேட்டதற்கு மேலும் அதிர்ச்சியான ஒரு தகவலை கூறியுள்ளார். அதாவது, பசியாக இருந்ததால், மண்டையை உடைத்து மூளையை வெளியே எடுத்து சமைத்து உண்டதாக கூறியுள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close