எங்க இரண்டு பேருக்கும் தொடர்பு இல்லங்க... அவுங்க இரண்டு பேரும்... வாய் திறக்கும் மகாலட்சுமி

  அனிதா   | Last Modified : 08 Dec, 2019 10:58 am
actor-mahalakshmi-byte

கடந்த சில நாட்களாக சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகின்றன. ராஜா ராணி, கல்யானம் முதல் காதல்வரை உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்தவர் ஈஸ்வர். இவர் ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெயஸ்ரீக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்திருந்தார். இந்நிலையில், திடீரென தன் கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல்நிலையத்தில் ஜெயஸ்ரீ புகார் அளித்தார். 

புகாரின் பேரில் காவல்துறையினர் ஈஸ்வர் மற்றும் அவரது தாயாரை கைது செய்தனர். ஈஸ்வர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜெயஸ்ரீ, சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தனது கணவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னிடம் விவகாரத்து கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், குடிபோதையில் தனது மகளிடம் தப்பாக நடக்க முயன்றதாகவும் அவர் கூறியிருந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, ஜாமீனில் வெளியே வந்த ஈஸ்வர், தன் மனைவியின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது. அவர் என்னிடம் பணம் பறிப்பதற்காக இதுபோன்ற பொய்களை கூறிவருவதாகவும், என் மனைவியின் நடவடிக்கைக்கு மகாலட்சுமியின் கணவர் அனில் தான் காரணம் எனவும் கூறினார். இது சின்னத்திரை வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நடிகை மஹாலஷ்மி, "தனக்கும், தனது கணவருக்கும் பிரச்சனை என்பதால் நாங்கள் விவாகரத்து கேட்டுள்ளோம். எங்க வழக்கு கோர்ட்ல இருக்கு.. என் கணவர் அனிலும், ஜெயஸ்ரீயும் சேர்ந்து  எங்களை பழிவாங்குறாங்க. அவங்களுக்கு எங்களிடம் உள்ள பணம் வேண்டும். அவங்க ரெண்டு பேரும் பார்ட்டி பண்ணுவாங்க. 7 வருஷமா நண்பர்களா இருக்காங்க. ஆனா இது எனக்கு தெரியவே தெரியாது. இப்போ, எனக்கும் ஈஸ்வருக்கும் தப்பான உறவு சொல்லுறாங்க. எனக்கு ஈஸ்வர் நல்ல நண்பர் மட்டும் தான் அவரை திருமணம் செய்து கொள்ளும்  எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை" என தெரிவித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close