பாலியல் வன்கொடுமையில் சிக்கிய பெண்ணை சீதையுடன் ஒப்பிட்டு பேசிய எம்.பி!

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 01:02 pm
adir-ranjan-chowdhury-speech-in-parliament

மக்களவையில் பேசிய காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‌உத்தரப் பிரதேசத்தில் ராமருக்கு கோயில் கட்ட முயற்சி நடக்கும் அதே வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள் எனப் பேசினார். 

உன்னாவ் சம்பவத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு தீவைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தை உத்தம பிரதேசமாக்குவோம் எனக் கூறியவர்கள் அதை அதர்ம பிரதேசமாக்கி இருப்பதாகக் கூறினார். இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தரப்பில் சிலர் பேசியதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. 

பின்னர் பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகளை மதரீதியாக தொடர்புபடுத்திப் பேசுவது துரதிருஷ்டவசமானது என்றார். மேற்கு வங்கத்தின் மால்டாவில் இதே போன்ற கொடுமை நடந்த போது, எதிர்க்கட்சியினர் வாய் திறக்கவில்லை என்ற அவர், பாலியல் வன்கொடுமை, கொலை, தீவைப்பு ஆகிய பெண்களுக்கு எதிரான மனிதத் தன்மையற்ற குற்றங்களை அனைவரும் ஒரே குரலில் கண்டிக்க வேண்டுமே தவிர, மதரீதியாக பேசக் கூடாது என்றார். அப்போது காங்கிரஸ் எம்பிக்கள் பிரதாபனும் குரியகோசும் ஆவேசமாக குரல் எழுப்பியவாறு அவையின் மையப்பகுதியை நோக்கி முன்னேறினார். இதையடுத்து சூழலை கட்டுப்படுத்துவதற்காக அவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

இதற்கிடையில் அமைச்சரை மிரட்டும் வகையில் நடந்து கொண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close