ரயில் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் பெண்... அதிர்ச்சி வீடியோ..

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 03:04 pm
woman-arrested-after-sex-assault-on-two-man

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்தில் பெண் ஒருவர் ஆணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்து நாட்டில் ஓடும் ரயிலில் ஜேடி கோணல் என்ற இளம் பெண் பயணம் செய்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளம் பெண் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து, வேறொரு இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ஆண் பயணியிடம் சென்று தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதைக்கேட்டு அந்த நபரும், அங்கிருந்த பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து, அங்கிருந்த மற்றொரு நபரையும் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியதால் மற்ற ரயில் பயணிகள் அந்த பெண்ணை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அப்பெண் யாருக்கும் அடங்காமல் கத்திக்கொண்டே இருந்தார். இதை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த நபரையும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பயணிகள் அளித்த புகாரின் பேரிலும், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close