ஃபாத்திமா லத்தீப் வழக்கு: மாணவியின் தந்தைக்கு உறுதியளித்த மத்திய அமைச்சர்..

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 03:56 pm
amit-sha-assures-of-cbi-enquiry-in-iit-student-suicide-case

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரளவை சேர்ந்த ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்  இரு மாநிலங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஃபாத்திமா லத்திப் தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்திற்கு பிறகு, அவரது தற்கொலைக்கு பேராசிரியர்கள் தான் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப் தமிழ்நாட்டிற்கு வந்து தனது மகள் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரையும் சந்தித்தார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லி சென்ற லத்தீஃப் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை வைத்தார். அப்போது, அவர் தனது மகள் மரணத்தில் 3 பேராசிரியர்கள், 7 மாணவர்கள் மீதுதான் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பின் லத்தீஃப் நிருபர்களிடம் பேசுகையில், எனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. விசாரணை சரியான முறையில் நடக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியதாக கூறினார். மேலும் கோரிக்கையை கேட்ட அமைச்சர், தேவைப்பட்டால் பெண் அதிகாரி தலைமையில், சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கை மாற்ற உதவுவதாக உறுதி அளித்ததாக தெரிவித்தார். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close