திருமணமாகாத ஆண், பெண் ஒரே அறையில் தங்குவது தவறில்லை.. உயர்நீதிமன்றம்!

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 04:14 pm
it-is-not-wrong-for-an-unmarried-man-and-woman-to-stay-in-the-same-room

தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் விடுதிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கியமான மாவட்ட தலைநகரங்களில் அதிகளவில் விடுதிகள் பெருகிவருகிறது. இந்நிலையில், கோவை நவ இந்தியா பகுதியில் ஓயோ நிறுவனம் சார்பில் சர்வீஸ் அபார்ட்மென்ட்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. அங்கு திருமணமாகாத ஆண்களும், பெண்களும் தங்கினால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. இதனால் புகாரின் பேரில், ஓயோ நிறுவனத்தின் சர்வீஸ் அபார்ட்மென்ட்க்கு சீல் வைக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து விடுதி உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, திருமணமாகாத ஆண்களும் பெண்களும் தங்குவதாகப் பத்திரிகைகளில் வெளியான செய்தியை வைத்து ஓட்டல் மூடப்பட்டுள்ளதை குறிப்பிட்டு திருமணமாகாத ஆண், பெண் ஒரே அறையில் தங்கினால் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இதை தவறு என்று சட்டம் சொல்லவில்லை என்றும், திருமணமாகாத ஆண் பெண் தம்பதியாக வாழ்ந்தால் கூட எந்தவித குற்றமும் இல்லை என உள்ளபோது இதுமட்டும் எப்படி குற்றமாகும். என கேள்வி எழுப்பினார். இந்த விடுதியின் அறையில் மதுபாட்டில்கள் கிடைத்ததால் மட்டும் இவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. இதனால் இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஓயோ நிறுவனத்தைத் திறக்கவேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close