24 வருடங்களுக்குப் பிறகு ரிலீசாகும் தல அஜித்தின் திரைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 05:25 pm
actor-ajith-s-digital-film-is-coming-soon

1995ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் மைனர் மாப்பிள்ளை.  இயக்குநர் வி.சி.குகநாதன் இயக்கத்தில், வெளியான இப்படத்தில் ரஞ்சித், வடிவேல், விவேக், ஒய்.ஜி.மகேந்திரன், அஜய்ரத்னம், கீர்த்தனா, சுபாஸ்ரீ, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்து இருந்தனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில், வடிவேல் முக்கிய கதாபாத்திரத்தில்  வருவார். 

மகனுக்கு பெண் தர மறுத்த ஸ்ரீவித்யாவிடம் சவால் விடும் வடிவேல், அதற்காக அஜித்தையும், ரஞ்சித்தையும் களம் இறக்குகிறார். அவர் நினைத்தது நிறைவேறியதா? என்பதே இப்படத்தின் கதை. இந்த படத்தில் 5 பாடல்கள், 5 சண்டை காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், 24 வருடங்களுக்குப்பின், இந்த படம் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநரான வி.சி.குகநாதன், `மைனர் மாப்பிள்ளை' படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். படத்தை விரை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close