ஜெயலலிதா படத்தில் பிரியாமணி? இந்த வேஷத்திலா நடிக்கிறார்? எடுபடிமா?

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 07:16 pm
priyamani-in-jayalalithaa-movie

கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இவர் பருத்தி வீரன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்தார்.  திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரியாமணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும், வெப் தொடரிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் தலைவி படத்தில் பிரியாமணி நடிக்க பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இதற்காக பரதநாட்டியம், தமிழ் போன்றவற்றை கங்கனா கற்றுகொண்டு வருகிறார். இதில், சசிகலாவின் வேடத்தில் நடிக்க பிரியாமணியிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. கங்கனா ரணாவத்துடன் அனைத்து காட்சிகளிலும் சேர்ந்து வருவதுபோல் அவரது கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close