இந்த வாரம் அதிர்ஷ்டத்தைக் குவிக்கும் 5 ராசிகள் இது தானாம்! | வார ராசிபலன்கள்!

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 07:22 pm
newstm-weekly-astrology

08.12.2019 முதல் 14.12.2019 வரையிலான இந்த வார ராசிபலன்கள்.. 

மேஷம்:
கிரகநிலை:
ராசியில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -   களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  
கிரகமாற்றங்கள்:
10-Dec-19 அன்று பகல் 12.11 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-Dec-19 அன்று இரவு 7.48 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
14-Dec-19 அன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
பலன்:
இனிமையாக பேசி அனைவரையும் கவரும் மேஷ ராசி அன்பர்களே ! இந்த வாரம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.  உடல் ஆரோக்கியம் பெறும்.  மனதில் தைரியம் கூடும்.  சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும்.
கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.  பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். அதனால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். 
மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.
பரிகாரம்: பழமுதிர்சோலை முருகனை நினைத்து வணங்க சுப காரியம் நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

ரிஷபம்:
கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ  -   ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய்  -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், புதன்  - அஷ்டம ஸ்தானத்தில்  சுக்ரன்,  குரு, சனி, கேது -  அயன, சயன,  போக ஸ்தானத்தில் சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
10-Dec-19 அன்று பகல் 12.11 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். 
12-Dec-19 அன்று இரவு 7.48 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
14-Dec-19 அன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
பலன்:
கற்ற வித்தைகளை சரியாக பயன்படுத்த தெரிந்த ரிஷபராசியினரே! இந்த வாரம் எடுத்த காரியம் வெற்றியடைவதுடன் லாப கரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங் கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும்.
கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகர மாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர் களிடம் கவனமாக பேசுவது  வியாபார விருத்திக்கு உதவும். 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
பெண்களுக்கு உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனசஞ்லம் நீங்கி நிம்மதி உண்டாகும். பெரியோர் பாராட்டு கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ மகாலட்சுமிக்கு செந்தாமரை மலரால் அர்சித்து வர செல்வங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

மிதுனம்:
கிரகநிலை:
ராசியில்  ராஹூ -   பஞ்சம ஸ்தானத்தில்   செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன்  -   களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது -  லாப ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
10-Dec-19 அன்று பகல் 12.11 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-Dec-19 அன்று இரவு 7.48 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். 
14-Dec-19 அன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
பலன்:
கள்ளமற்ற மனதுடன் திகழும் மிதுன ராசியினரே நீங்கள் அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யக்கூடியவர். இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி கிடைக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.
கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும். தொழில் போட்டிகள் உண்டாகலாம். அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை  செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும்.  பணவரத்து திருப்திதரும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய வீண்பயம் ஏற்பட்டு நீங்கும். வாகனங் களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீ நாராயணீயம் சொல்லி வாருங்கள். உள்ளத்தில் தெளிவு உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

கடகம்:
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், புதன் - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன்,  குரு, சனி , கேது -  தொழில்  ஸ்தானத்தில் சந்திரன்  -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
10-Dec-19 அன்று பகல் 12.11 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-Dec-19 அன்று இரவு 7.48 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
14-Dec-19 அன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். 
பலன்:
எடுத்த காரியங்களை விரைவாக முடித்து விட வேண்டும் என்ற எண்ணமுடைய கடக ராசியினரே இந்த வாரம்  சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம்.  
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர் களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.  
பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.  
மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: ஐந்து சுமங்கலி பெண்களுக்கு மங்கல பொருட்கள் வைத்துக் கொடுக்க நல்லது நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

சிம்மம்:
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன், புதன்  -   பஞ்சம ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  - பாக்கிய  ஸ்தானத்தில் சந்திரன் -   லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. 
கிரகமாற்றங்கள்:
10-Dec-19 அன்று பகல் 12.11 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-Dec-19 அன்று இரவு 7.48 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
14-Dec-19 அன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
பலன்:
அடுத்தவரை அடக்கி ஆளும் திறமை பெற்ற சிம்ம ராசியினரே இந்த வாரம் உங்கள் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும்.
கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும்.  குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு  இருக் கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலை யில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியா பாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறு வார்கள். பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.
பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். 
மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். பாடங்கள் படிப்பதில் வேகம்  இருக்கும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனை குறையும். 
பரிகாரம்: பிரித்தியங்கார தேவிக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

கன்னி:
கிரகநிலை:
தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன்  -  சுக  ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  -  அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. 
கிரகமாற்றங்கள்:
10-Dec-19 அன்று பகல் 12.11 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-Dec-19 அன்று இரவு 7.48 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
14-Dec-19 அன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
பலன்:
மிடுக்கான நடையுடன் நடந்து கொள்ளும் கன்னி ராசியினரே இந்த வாரம் புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தை கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர் கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படலாம். 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.  அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்கு வீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ தர்ம சாஸ்தா அஷ்டகம் தினமும்  படித்து வர வெற்றிகள் குவியும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

துலாம்:
கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், புதன் -  தைரிய ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது -  களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  
கிரகமாற்றங்கள்:
10-Dec-19 அன்று பகல் 12.11 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-Dec-19 அன்று இரவு 7.48 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
14-Dec-19 அன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
பலன்:
தான் எதிர்பார்க்கும் காரியம் நடக்காவிட்டால் மிகவும் துவண்டு போய்விடும் துலா ராசியினரே! இந்த வாரம் இறுதியில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். வார தொடக்கத்தில் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்த சேரும். 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.  பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.
பெண்களுக்கு எதிலும்   கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.
மாணவர்களுக்கு கல்வியில்  நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்: மகாலட்சுமிக்கு 108 முறை குங்கும அர்ச்சனை செய்யுங்கள். வெற்றிகளைக் காணுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

விருச்சிகம்:
கிரகநிலை:
ராசியில்  சூர்யன், புதன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  -   ரண, ருண   ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு-  அயன, சயன, போக ஸ்தானத்தில் -  செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
கிரகமாற்றங்கள்:
10-Dec-19 அன்று பகல் 12.11 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-Dec-19 அன்று இரவு 7.48 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
14-Dec-19 அன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
பலன்:
செய்யும் தொழிலில் ஆற்றல் மிகுந்த விருச்சிக ராசியினரே  இந்த வாரம் புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன் றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும்.
கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.     
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்காது. நிதானமாக நடக்கும். பணவரத்து தாமதப் படலாம். ஆர்டர்கள் தொடர்பாக வீண் அலைச்சல் உண்டாகலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு  சங்கடப்பட வேண்டி இருக் கும்.  வாக்குவன்மையால் நன்மை ஏற்படும்.
பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.
பரிகாரம்: ஸ்ரீ லலிதாம்பிகையை பூஜித்து வர தொட்டதெல்லாம் துலங்கும். காரிய சித்தி அடைய முடியும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

தனுசு:
கிரகநிலை:
ராசியில் சுக்ரன், குரு, சனி , கேது - பஞ்சம  ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு  -  லாப ஸ்தானத்தில் செவ்வாய் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. 
கிரகமாற்றங்கள்:
10-Dec-19 அன்று பகல் 12.11 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-Dec-19 அன்று இரவு 7.48 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
14-Dec-19 அன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
பலன்:
திறமைகளை தக்க சமயத்தில் வெளிக் காட்டத் தெரிந்த தனுசு ராசியினரே இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும்.எதிலும் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.
கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள்.
பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: குருபகவானுக்கு நெய் தீபமேற்றி வழிபட பிரச்சினைகள் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

மகரம்:
கிரகநிலை:
சுக  ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ -  தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் -  லாப ஸ்தானத்தில்  சூர்யன், புதன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சுக்ரன்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
கிரகமாற்றங்கள்:
10-Dec-19 அன்று பகல் 12.11 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-Dec-19 அன்று இரவு 7.48 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
14-Dec-19 அன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
பலன்:
தவறு செய்தவர்களை மன்னிக்கும் குணமுடைய மகர ராசியினரே  இந்த வாரம் பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம்.  ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.  எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும்.  எழுத்துவகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது.
குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் விட்டு கொடுத்து செல்வது மன அமைதியை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசுவது நன்மை தரும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமையுடன் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்க நவகிரக தோஷங்கள் விலகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனி

கும்பம்:
கிரகநிலை:
தைரிய  ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  -   பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் -  லாப ஸ்தானத்தில்   சுக்ரன், குரு, சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன. 
கிரகமாற்றங்கள்:
10-Dec-19 அன்று பகல் 12.11 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-Dec-19 அன்று இரவு 7.48 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
14-Dec-19 அன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
பலன்:
அனுபவ அறிவும், செயல்திறனும்  பெற்ற  கும்பராசியினரே உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். இந்த வாரம் செலவு அதிகரிக்கும்.  அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும்.வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும்.
குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். வழக்குகளில் சமாதானமாக போவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும்.  புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். 
பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனதில்  ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும்.
மாணவர்களுக்கு அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். 

பரிகாரம்: திருநள்ளாறு சென்று வர காரியத்தடைகள் விலகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனி

மீனம்:
கிரகநிலை:
தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ  -   அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில்  ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
10-Dec-19 அன்று பகல் 12.11 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-Dec-19 அன்று இரவு 7.48 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
14-Dec-19 அன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
பலன்:
எதிர்வரும் துன்பங்களை தவிடுபொடியாக்கும் மீன ராசியினரே நீங்கள் பொது வாழ்க்கை யில் புகழ்பெறுவீர்கள். இந்த வாரம் செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து  அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவன மாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.
குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. ஆனால் வருமானம் வழக்கம் போல் இருக்கும். 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை  தருவதாக இருக்கும்.
பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.
மாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை  விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை  படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: வீட்டில்  தொடர்ந்து சாம்பிராணி இடுவது உடல் நலத்தில் இருந்த தொய்வு நிலையை மாற்றும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close