'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்! அதிர வைத்த முருகதாஸ்!

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 08:44 pm
darbar-audio-launch-ar-murugadas-rajini-speech

ரஜினிகாந்த் நடித்திருக்கும் 167வது படமான 'தர்பார்' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்திருக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


இன்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் ஒளிபரப்ப பட்ட ஸ்பெஷல் வீடியோவில், விஜய் நடித்த கத்தி, ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

 
விழா மேடையில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சின்ன வயதில் நிலாவைப் பார்த்து சாப்பிடுவோம். ஆனால் இப்போது நிலாவில் இறங்கியது போல இருக்கிறது.  உங்கள் எல்லாரையும் விட நான் தான் ரஜினிகாந்தின் மூத்த ரசிகன். எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் நிறைய வேறுபாடு இருக்கும். இப்போதிருக்கும் நடிகர்கள் அனைவரிடமும் ரஜினிகாந்தின் சாயல் கட்டாயம் இருக்கிறது என்றார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close