இன்று மழை பெய்ய வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  முத்து   | Last Modified : 08 Dec, 2019 12:15 pm

கிழக்குத் திசையில் இருந்து வீசும் காற்றின் தாக்கம் காரணமாக, கடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார். 
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காணப்படுகிறது. இதன் காரணமாக, இந்தப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் நாளை வரை செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் சென்னையின் நகரின் பல்வேறு இடங்களில் இரவில் பலத்த மழை பெய்தது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close