அவமானப்படுத்திய தயாரிப்பாளர்! சாதித்து காட்டிய ரஜினி!

  முத்து   | Last Modified : 12 Dec, 2019 09:45 am
darbar-movie-rajini-speech

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 167- வது படமாக உருவாகியுள்ளது 'தர்பார்'. அவருக்கு ஜோடியாக நயன்தாரா, இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், விவேக், யோகி பாபு, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சங்கர், இசையமைப்பாளர் அனிருத், லைகா நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், பாரதிராஜாவின் 16 வயதினிலே’ படத்தில் பரட்டை என்ற கேரக்டரில் தான் நடித்துக் கொண்டிருக்கும் போது தனக்கு மிகப் பெரிய புகழ் கிடைத்ததாக அவர் கூறினார். அந்த புகழின் காரணமாக தன்னை ஒரு தயாரிப்பாளர் அணுகி, தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்ததாகவும் ஆனால் அவர் கடைசி நேரத்தில் திடீரென தனக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து அவமானப்படுத்தியதாக கூறினார். அந்த அவமானத்தில் மனமுடைந்த தான் இதே கோடம்பாக்கத்தில் பெரிய ஸ்டாராக ஆகி காட்டுகிறேன் என்று மனதுக்குள் சவால் விட்டதாக கூறிய ரஜினிகாந்த் அந்த சவாலை இரண்டே ஆண்டுகளில் முடித்ததாகவும் தெரிவித்தார். அன்றிலிருந்து தான் தன்னுடைய உண்மையான வளர்ச்சி ஆரம்பமானது என்றும் ரஜினிகாந்த் கூறினார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close