ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்! மகிழ்ச்சியில் பெற்றோர்!

  அனிதா   | Last Modified : 08 Dec, 2019 01:58 pm
quadruplets-in-first-delivery-happy-couples

இலங்கையின் கண்டி பகுதியைச் சேர்ந்த நளிந்த லக்சான் விஜேதுங்க என்பவரது மனைவி தேவிகா உதயங்கனி ஜெயசூரிய முதல் பிரசவத்திலேயே 4 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். பிரசவம் பேராதனை வைத்தியசாலையில் நடந்துள்ளது. தற்போது, வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அக்குரணை பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் சிறிமல் விஜேதுங்கவின் மூத்த புதல்வரே நளிந்த லக்சான் விஜேதுங்க எனவும் அவர் அரச துறையில் பணியாற்றி வருவதாகவும் மனைவி தொழில் புரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பிறந்துள்ள நான்கு ஆண் குழந்தைகளுக்கு ஹிருத், வினுத், கெனுத் மற்றும் சனுத் என பெயரிட்டுள்ளதாக குழந்தைகளின் தந்தை நளிந்த லக்சான் விஜேதுங்க தெரிவித்துள்ளார். 
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close