முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..

  அனிதா   | Last Modified : 09 Dec, 2019 09:59 am
vijay-in-murali-son-s-engagement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் முரளியின் மகன் நிச்சியதார்த்தத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷூக்கும் இயக்குநர் சினேகா ப்பிரிட்டோவுக்கும் இடையே காதல் மலர்ந்ததை அடுத்து வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இயக்குநர் சினேகா ப்ரிட்டோ என்பவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகரின் சகோதரியான விமலா மற்றும் தளபதி 64 படத்தின் தயாரிப்பாளரான சேவியர் ப்ரிட்டோ தம்பதியின் மகள் ஆவார். 

இந்நிலையில், சினேகா ப்ரிட்டோ, ஆகாஷின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் கடந்த 6ஆம் தேதி இரவு நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் விஜய் கலந்து கொண்டார். காரில் இருந்து இறங்கியபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும், விஜய் ஆகாஷ் முரளியுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. அண்ணன் அதர்வா இருக்கும்போது தம்பிக்கு எப்படி முதலில் திருமணம் செய்வது என்று யோசித்துள்ளனர். ஆனால் அதர்வா படங்களில் கவனம் செலுத்தி வருவதால் திருமணத்தில் ஈடுபாடு காட்டவில்லையாம். அதோடு, என் திருமணத்தை பிறகு பார்க்கலாம், தம்பிக்கு முதலில் முடித்துவிடலாம் என்று அதர்வாவே  தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆகாஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close