ஆட்சியை தக்கவைக்கிறார் எடியூரப்பா! வாக்கு எண்ணிக்கை நிலவரம்!

  Ramesh   | Last Modified : 09 Dec, 2019 10:48 am
bjp-leading-in-karnataka-election

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள  கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளன. 


கடந்த 5-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அதிகபட்சமாக ஒசக்கோட்டை தொகுதியில் 90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 15  தொகுதி இடைத்தேர்தலில்  பாஜக 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 2 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம், சுயேச்சைகள் தலா ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளன.

கர்நாடகத்தில் தற்போது முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா கட்சிக்கு 105 எம்.எல்.ஏ.க்களும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவும் உள்ளது. இடைத்தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நீடிக்கும். 6 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். தற்போது  பாஜக முன்னிலையில் இருப்பதால் எடியூரப்பா தனது ஆட்சியை தக்கவைத்து கொள்வார் என தெரிகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close