தல அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

  Ramesh   | Last Modified : 09 Dec, 2019 11:37 am
ajith-s-valimai-release-date-announced

நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, வினோத் இயக்கி வரும் வலிமை படத்தையும் போனிகபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். வலிமை படத்தின் ஷூட்டிங் இம்மாதம் 13ம் தேதி துவங்குகிறது. 

இப்படத்திற்கு நடிகர் மற்றும் நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் நிலையில் அஜித்தின் கெட்டப் கசிந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் ஹீரோ அஜித்துக்கு போலீஸ் கதாபாத்திரம் என்ற வகையில் படத்தின் நாயகிக்கும் போலீஸ் கதாபாத்திரம் என்பதால் படக்குழுவினர் ஹீரோயின் தேடுதல் வேட்டையில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

முதலில் நயன்தாரா என சொல்லப்பட்டது. பின்னர் பாலிவுட் ஹீரோயின் ப்ரணிதி சோப்ரா என கூறப்பட்டது. மேலும் போனிகபூர், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படங்களும் வெளியான நிலையில், இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று நயன்தாரா தரப்பில் கூறப்பட்டது. 

அதற்கு பிறகு ரகுல் ப்ரீத் சிங் உடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதால் இப்படத்திற்கு நடிகை யார் என்று தெரியவில்லை அதனால் இப்பட ஷூட்டிங் தள்ளிப் போகவும் அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு கண்டிப்பாக வெளியாகும் என படக்குழு தெரிவித்திருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close