காதலன் கைதால் வெறியான காதலி.. பலே ஐடியா போட்டு சாட்சிகளை பழிவாங்கிய பெண்...

  அனிதா   | Last Modified : 09 Dec, 2019 11:35 am
girl-friend-revenge-for-lover-arrested

டெல்லி ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், எனக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி காரில் ஏற்றி சென்ற 3 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறிய 3 பேரை அடையாளம் காட்டியுள்ளார். 

புகாரின் பேரில், காவல்துறையினர் 3பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், போலீசார் பல வகையில் விசாரணை நடத்தியும் 3 பேரும் எந்த குற்றமும் செய்யவில்லை என கூறிவந்துள்ளனர். மேலும், அவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால், குழம்பி போன போலீசார் மறுபடியும் அந்த பெண்ணை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, அந்த பெண் தன்னை கடத்தியதாக கூறிய கார், இடம் போன்ற அனைத்து தகவல்களிலும் முன்பு கூறியதற்கு மாறாக வேறு தகவல்களை கூறியுள்ளார். 

இதனால், அந்த பெண் பொய் புகார் அளித்துள்ளார் என்பதை உறுதி செய்த போலீசார், எதற்காக பொய் புகார் அளித்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, ஒரு கொலை வழக்கில் சிறையில் உள்ள எனது காதலனுக்கு எதிராக இந்த 3 பேரும் சாட்சியளித்தனர். இதனால் எனது காதலன் சிறையில் உள்ளார். எனவே அவர்களை பழிவாங்கவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பெண்ணையும், அவருக்கு உதவியாக இருந்த நண்பர்களையும் கைது செய்தனர். மேலும், பொய் புகாரில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் விடுதலை செய்துள்ளனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close