பிரபஞ்ச அழகி-2019 பட்டத்தினை தட்டிச்சென்ற தென்னாப்பிரிக்கா பெண்

  முத்து   | Last Modified : 09 Dec, 2019 12:28 pm
miss-universe-2019-winner-is-miss-south-africa-zozibini-tunzi

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கருப்பினப் பெண் ஸோசிபினி துன்சி, 2019ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி பட்டத்தினை தட்டிச்சென்றுள்ளார். 

பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு, அமெரிக்காவின் அட்லான்டா நகரத்தில் உள்ள டெய்லர் பெரி அரங்கில் நடைபெற்றது. முதல்கட்ட போட்டியில் 90 நாடுகளை சேர்ந்த அழகிகள்  கலந்துகொண்டனர். அவர்களுக்கு பாரம்பரிய உடை, ஒய்யார நடை, கேள்வி பதில் உள்ளிட்ட பல்வேறு கட்ட போட்டிகள் அடிப்படையில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தியா சார்பில் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்றுள்ள வர்திகா சிங், வைல் கார்டு மூலம் டாப் 20 பட்டியலில் இடம்பிடித்தார். இதையடுத்து, நடைபெற்ற இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, போர்டோரிகா அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு கட்ட போட்டிகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஸோசிபினி துன்சி, 2019ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி பட்டத்தை கைப்பற்றியுள்ளார். 


இந்தப்போட்டியில் கடைசி சுற்றுக்கு தகுதி பெற்ற 3 பேரிடமும் ஒரு பொதுவான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஸோசிபினி துன்சி, அளித்த பதிலே அவருக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தையும் வாங்கிக் கொடுத்துள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் இளம் பெண்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய விஷயம் எது? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸோசிபினி துன்சி, இளம் பெண்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய விஷயம் தலைமைப் பண்பு என தெரிவித்தார். மேலும் சமூகத்தில் பெண்கள் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக்கொண்டு உங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் எல்லாவற்றை விடவும் முக்கியனமானது என தெரிவித்தார். ஸோசிபினி துன்சியின் இந்த பதில் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.

பிரபஞ்ச அழகிக்கான 2வது இடத்தை போர்டோரிகாவை சேர்ந்த மேடிசன் ஆண்டர்சன் கைப்பற்றினார். பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றுள்ள 26 வயது துன்சி, நடப்பாண்டில் தான் தென்னாப்பிரிக்க அழகியாக பட்டம் சூட்டப்பட்டார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close