ட்யூஷன் மாணவிக்கு பாலியல் தொல்லை! கோவையில் தொடரும் அட்டூழியம்!

  அனிதா   | Last Modified : 10 Dec, 2019 02:11 pm
lawyer-arrested-for-sexual-misconduct

கோவை மாவட்டம்   பி.என்.புதூரைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன்(42). இவர் கடந்த 2012 முதல் 2017ஆம் ஆண்டுகளில் கனடாவில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2017ஆம் ஆண்டு கனடாவில் நிகழ்ந்த ஒரு விபத்தில் அவரது மனைவி மற்றும் மகள் இறந்து விட்டதால் நாடு திரும்பிய அவர், பி.என்.புதூரில் வசித்து வந்தார். சில காலங்களாக மனைவி மற்றும் மகள் இறந்த சோகத்தில் இருந்த அவர், சோகத்தை மறப்பதற்காக கோவை  ஆர்.எஸ்புரம் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் பாடம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரநாராயணன், 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர், கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் சங்கரநாராயணை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close