பிரபல நடிகரை வீட்டிற்கு அழைத்து அட்வைஸ் கூறிய அஜித்!

  அனிதா   | Last Modified : 09 Dec, 2019 03:49 pm
ajith-has-called-the-famous-actor-home

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகர் அஜித் பட நிகழ்ச்சிகளிலோ, தொலைக்காட்சி பேட்டிகளிலோ கலந்துகொள்வதில்லை என்பதால், ரசிகர்கள் அவ்வபோது அஜித் குறித்து வெளியாகும் செய்திகளுக்காக காத்திருக்கின்றனர். அது மட்டுமின்றி தல அஜித் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை கேட்டு சமூக வலைதளங்கள் வாயிலாக அஜித்தை பாராட்டியும் வருகின்றனர். 

நடிகர் அஜித் பட பிடிப்பு தளங்களில் பிரியாணி சமைத்து கொடுப்பார் என்றும், வீட்டிற்கு அழைத்து சமைத்து கொடுத்து மகிழ்வார் என்றும் பல நடிகர்கள், நடிகைகள் கூறியுள்ளனர். இந்நிலையில், மலையாள நடிகர் நிவின் பாலி தற்போது ஒரு விழாவில் அஜித் பற்றி பேசியுள்ளார். அதில், பிரேமம் படம் வெளியான நேரத்தில் அஜித் தன்னை வீட்டு அழைத்ததாகவும், அப்போது பல அட்வைஸ்களை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறிய அட்வைஸ்களில் பலவற்றை தற்போது பின்பற்றி வருவதாகவும் நிவின் பாலி கூறியுள்ளார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close