ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் விஜய்? ரசிகர்கள் கொண்டாட்டம்.

  அனிதா   | Last Modified : 09 Dec, 2019 04:07 pm
vijay-and-shankar-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் நடித்து வருகிறார். இவர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த நண்பன் படம் பெரும் வெற்றியை தந்தது. இயக்குநர் ஷங்கர் ரஜினி, கமல் என பிரபல நடிகர்களை வைத்து படம் எடுத்து சூப்பர் ஹிட் ஆக்கியுள்ளார். தற்போது, உலக நாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2021 ல் வெளியாகும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது, தளபதி விஜயுடன் எப்போது அடுத்த படம் எடுக்க போகிறீர்கள் என கேட்டனர். அதற்கு பதிலளித்த ஷங்கர். நானும் ரெடி தான், அவரும் ரெடி தான். விரைவில் நடக்கலாம் என்பது போன்று கூறி பேச்சை முடித்தார்.

இதனால் விரைவில் ஷங்கர்- விஜய் கூட்டணியில் படம் எடுக்கப்படலாம் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தளபதி 64 படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில், ஷங்கர் இயக்கத்தில் விஜய் விரைவில் நடிக்கவுள்ளதாக வெளியாகும் செய்திகள் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close