டெல்லி தீ விபத்திற்கு காரணம் என்ன? வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

  அனிதா   | Last Modified : 09 Dec, 2019 04:28 pm
delhi-fire-accident

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அனாஜ் மண்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 50 க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் சார்பாக தேவையான உதவிகளும், பலியானவர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்து நடைப்பெற்ற கட்டிடத்தின் உரிமையாளர் தலைமறைவாக இருந்த நிலையில்., அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் சரிவர தெரியாத நிலையில், பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்டு வந்ததே தீ விபத்திற்கான காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close