கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம்! வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்!

  அனிதா   | Last Modified : 10 Dec, 2019 02:06 pm
public-rejects-imported-onion

வெங்காயத்தின் விலை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில், வெங்காயத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து 11 ஆயிரம் டன் வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்திருந்தது. இதில் இன்று சுமார் 30 டன் வெங்காயம் எகிப்தில் இருந்து திருச்சியை வந்தடைந்தது. சனிக்கிழமை காலை துருக்கியில் இருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதியான நிலையில், ஒரு மணி நேரத்தில் அனைத்து வெங்காயமும் விற்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று திருச்சிக்கு வந்திருந்த 30 டன் வெங்காயத்தை வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை.  ஆனால், வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் வெங்காயத்தின் நிறம் கருப்பாக இருப்பதால், மக்கள் அதனை வாங்க தயக்கம் காட்டுவதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். பார்க்க கருப்பாக இருப்பதால், அதனை வாங்கி உண்டால் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுமோ என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆனால், வெங்காயம் பார்க்க நிறம் மட்டும்தான் கருப்பாக இருக்கிறது. ஆனால், நம்ம ஊர் வெங்காயம் போலவே தான் இதுவும் என்று வணிகர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close