சென்னையில் வெங்காயத்தின் விலை அதிரடியாய் சரிந்தது! காரணம் என்ன?

  அனிதா   | Last Modified : 10 Dec, 2019 10:15 am
sudden-slash-in-onion-price

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே வந்த நிலையில், மாநில அரசு, மத்திய அரசின் நடவடிக்கையால் இன்று சென்னையில் வெங்காயத்தின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.40 முதல் 60 ரூபாய் வரையில் விலை குறைந்து பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

தமிழகத்தில் பெரிய வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்தது. நேற்று வரையில், பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.180 வரைக்கும், சாம்பார் வெங்காயம் விலை கிலோ ரூ.170 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரித்ததாலும், பொதுமக்கள் பயன்பாட்டை குறைத்ததாலும், சென்னையில் வெங்காயத்தின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று மொத்த விலையில் 170 ரூபாய் வரை விற்கப்பட்ட முதல் தர வெங்காயம் இன்று 120  ரூபாய்க்கும், வெங்காயத்தின் அளவு மற்றும் தரத்தை கொண்டு 100 ரூபாய்க்கு குறைவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயத்தின் விலை திடீரென குறைந்ததற்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரித்ததும், பயன்பாட்டை பொதுமக்கள் குறைத்தது உள்ளிட்டவையே காரணம் என்று கூறியுள்ள வியாபாரிகள், வரும் நாள்களில் அதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close