கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக

  முத்து   | Last Modified : 10 Dec, 2019 09:33 am
bjp-wins-12-seats-in-karnataka-assembly

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா 12 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் எடியூரப்பா அரசு ஆபத்தில் இருந்து தப்பியது.

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. குமாரசாமி முதலமைச்சராக பதவி ஏற்றார். 14 மாதங்கள் மட்டுமே அவரால் முதலமைச்சர் பதவியில் இருக்க முடிந்தது. 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.
அதைத்தொடர்ந்து ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. உள்பட 106 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எடியூரப்பா மீண்டும் முதலமைச்சரானார். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதில் நீதிமன்ற வழக்குகளால் இரண்டு தொகுதிகளை தவிர 15 தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 

நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தொடக்கம் முதலே பா.ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது. இறுதியில் அக்கட்சி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவருமே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். 

காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒசக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடா வெற்றி பெற்றுள்ளார். அவர் பா.ஜனதாவை சேர்ந்த பச்சேகவுடா எம்.பி.யின் மகன் ஆவார். ஜனதா தளம்(எஸ்) கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சி தன்வசம் இருந்த 3 தொகுதிகளையும் பறிகொடுத்துவிட்டது. 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் எடியூரப்பா அரசுக்கு ஆபத்து நீங்கியது. எடியூரப்பா இனி அடுத்த 3½ ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இன்றி ஆட்சி நடத்த முடியும்.
12 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் பலம் 105ல் இருந்து 117 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரசின் பலம் 66ல் இருந்து 68 ஆக அதிகரித்துள்ளது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close