குமரி கோயிலில் காதலனுடன் நயன்தாரா! திருமணத்திற்கான சிறப்பு பூஜை!

  முத்து   | Last Modified : 10 Dec, 2019 09:36 am
nayanthara-in-kanniyakumari-temple

கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பிரசித்த பகவதியம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம் செய்தார்.  
கன்னியாகுமரியிலுள்ள பிரசித்திப்பெற்ற பகவதியம்மன் திருக்கோயிலுக்கு நேற்று இரவு நயன்தாரா வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்று சுவாமி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று அவர் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணைத்தில் வேகமாக பரவி வருகின்றன. 
மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள அம்மன் கோயிலில் நயன்தாரா சாமி தரிசனம் செய்துள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதை, திரைக்கதையில் உருவாகவுள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். பாலாஜியோடு இணைந்து என்.ஜே.சரவணன் இயக்குநர் பொறுப்பைக் கவனிக்க உள்ளார்.  இந்தப்படத்தில் அம்மன் அவதாரம் எடுக்க உள்ள நயன்தாரா பகவதி அம்மனாக நடிக்கவுள்ளார். படத்திற்காக படக்குழுவினர் அனைவரும் சைவத்துக்கு மாறி உள்ளதாகவும், நடிகை நயன்தாரா விரதம் இருந்து வருவதாகவும் தகவல் வெளியானது. நடிகை நயன்தாரா கோயிலுக்கு வந்த செய்தி பரவியதை அடுத்து அப்பகுதியில் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close