கல்விக்கடன் தள்ளுபடியா? நிதியமைச்சர் அதிரடி!

  முத்து   | Last Modified : 10 Dec, 2019 09:36 am
no-proposal-to-waive-off-education-loans-says-fm

நாட்டியில் வேலையிண்மை அதிகரித்து வருவதாகவும் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தகவல் பரவியது. இந்நிலையில் இது தொடர்பாக மக்களவையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில், கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, கடந்த 2016-2017 கல்வி ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 3 ஆண்டுகளில், நிலுவையில் உள்ள கல்விக்கடன்களின் தொகை ரூ.67 ஆயிரத்து 685 கோடியே 59 லட்சத்தில் இருந்து ரூ.75 ஆயிரத்து 450 கோடியே 68 லட்சமாக அதிகரித்துள்ளது. இவை பொதுத்துறை வங்கிகள் அளித்த புள்ளிவிவரப்படி தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

கல்விக் கடன்களை திருப்பிச் செலுத்துமாறு வங்கிகள் அளித்த நிர்ப்பந்தத்தால், எந்த மாணவரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் இல்லை என்றும் கல்விக்கடன்களை திரும்ப வசூலிக்க பலவந்த நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில், கல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், வங்கிகள் அளித்த கல்விக் கடன்களையும், கிடைத்த வேலை வாய்ப்புகளையும் ஒப்பிட்டு பார்க்கக் கூடிய புள்ளி விவரம் எதுவும் இல்லை என்றும் தனது பதிலில் அவர் கூறியிருக்கிறார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close