என் புருஷனை மயக்கிட்டா... ஆடியோ ஆதாரத்துடன் நடிகை ஜெயஸ்ரீ!

  அனிதா   | Last Modified : 10 Dec, 2019 01:14 pm
they-threaten-to-kill-me-on-the-phone-jeyashree

கடந்த சில நாட்களாக 2 கும்பத்தினரின் பிரச்சனைகள் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜா ராணி, கல்யானம் முதல் காதல்வரை உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்தவர் ஈஸ்வர். இவர் வம்சம் சீரியலில் வில்லியாக நடித்த ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெயஸ்ரீக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்திருந்தார். இந்நிலையில், திடீரென தன் கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல்நிலையத்தில் ஜெயஸ்ரீ புகார் அளித்தார். 

புகாரின் பேரில் காவல்துறையினர் ஈஸ்வர் மற்றும் அவரது தாயாரை கைது செய்தனர். ஈஸ்வர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜெயஸ்ரீ, சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தனது கணவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னிடம் விவகாரத்து கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், குடிபோதையில் தனது மகளிடம் தப்பாக நடக்க முயன்றதாகவும் அவர் கூறியிருந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, ஜாமீனில் வெளியே வந்த ஈஸ்வர், தன் மனைவியின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது. அவர் என்னிடம் பணம் பறிப்பதற்காக இதுபோன்ற பொய்களை கூறிவருவதாகவும், என் மனைவியின் நடவடிக்கைக்கு மகாலட்சுமியின் கணவர் அனில் தான் காரணம் எனவும் கூறினார். இதேபோல், மகாலட்சுமியும் தனது கணவர் அனில் மற்றும் ஜெயஸ்ரீ பார்ட்டி பண்ணுவாங்க.. அவுங்க பணம் பறிப்பதற்காக தான் எங்கள் மீது தேவையில்லாத குற்றசாட்டை வைத்துள்ளனர். நானும் ஈஸ்வரும் வெரும் நண்பர்கள் தான் என தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, ஜெயஸ்ரீ தான் கூறுவது தான் உண்மை என கூறிவருவதுடன் அவ்வபோது ஆதாரங்களையும் வெளியிட்டார். சமீபத்தில், அவர்கள் இருவரும் முகநூலில் பப்பு என்று கொஞ்சி கொள்ளுவது போன்ற ஆதாரத்தை வெளியிட்டார். 

இந்நிலையில்  நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயஸ்ரீ, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆர் எங்கள் குடும்ப நண்பர் என்றும் என் அம்மா ஒரு நடிகை என்றும் நான் பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்தவள் என்றும் குறிப்பிட்டு, நான் ஏன் இவர்களின் பணத்திற்கு ஆசைப்பட போகிறேன் என கேள்வி எழுப்பினர். அதோடு, ஈஸ்வருக்கு இதுவரை 15 சீரியல்களுக்கும் மேல் வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளதாகவும், 47 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், தான் அவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும், எல்லா பிரச்சனைக்கும் மாகாலட்சுமி தான் காரணம்  என்றும் குற்றம் சாட்டிய அவர், எனக்கும் என் மகளுக்கும் செய்ய வேண்டியவற்றை இப்போது அவளுக்கும் அவளின் மகனுக்கும் செய்து கொண்டிருப்பதாக கூறினார்.  அதோடு மகாலட்சுமிக்கு அரசியல் ஆதரவு உள்ளதாகவும், நேற்றிரவு தனக்கு போனில் கொலை மிரட்டல் வந்ததாகவும் கூறிய ஜெயஸ்ரீ, இதனால் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகப்போவதாக தெரிவித்துள்ளார்.  

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close